சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆறு நாட்கள் நடந்த தமிழக சட்டசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
மீண்டும் கூடுவது குறித்த மறுதேதி குறிப்பிடப்படாமல் இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, 14-வது சட்டசபை கூட்டத் தொடர் இந்த மாதம் 3-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மொத்தம் 6 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.
அத்துடன் சட்டசபை கூடும் நாள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வத்தால் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக, சபாநாயகர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்
6 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் 2 தினங்கள் திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications