காரைக்குடியில் 4 வயது சிறுமி பலாத்காரம்!
காரைக்குடி: காரைக்குடியில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சிறுமி ரோஸ் (4) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வழக்கம் போல் தனது தாயாருடன் இரவு நேரத்தில் ரோட்டோரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக குடிபோதையில் வந்த ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தலைமறைவாகி விட்டான்.
வலியால் துடித்த ரோஸை காரைக்குடி அரசு மருத்துமனையில் அவரது தாயார் சேர்த்தார். மேலும், இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், புதுவயலை சேர்ந்த சாகுல் ஹமீது (42) தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான் என்று தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications