தொடர்ந்து பெய்யும் கனமழை-வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழை காரணமாக மும்பை வெள்ளக்காடாகியுள்ளது.

ஜூன் 12ம் தேதி மும்பையில் தென் மேற்குப் பருவ மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இருப்பினும் 2 நாட்களுக்கு முன்பே மும்பையில் மழை பெய்யத் தொடங்கி விட்டது.

வெள்ளிக்கிழமை மாலை முதல் அங்கு கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. விட்டு வி்ட்டுப் பெய்து வரும் மழை காரணமாக மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளான மத்திய மும்பையின் ஹிந்த்மாதா, மேற்கு புறநகர்ப் பகுதியான அந்தேரி மற்றும் மாதுங்கா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது.

சாலைப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் ஓடுவதால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

அதேபோல விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சாலைகளில் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. சாலைகள் அனைத்திலும் தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மும்பை மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+