பாகிஸ்தானின் பெஷாவரில் தொடர் குண்டுவெடிப்புகள்-30 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள பெஷாவரில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் நடந்துள்ள மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவமாக இது கருதப்படுகிறது.
இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஒன்று தற்கொலைப் படைத் தாக்குதலாகும்.
முதல் தாக்குதல் மிகச் சிறியதாக இருந்தாதவும், 2வதாக நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் சற்று பலமானதாக இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலிபான் தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்குவதற்காக பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். அந்த வரிசையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications