மிட்டே பத்திரிக்கையாளர் கொலை-சோனியா கண்டனம்
டெல்லி: மும்பையில் மிட்டே இதழின் கிரைம் செய்தியாளர் ஜோதிர்மாய் தேய், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டப்பகலில் ஜோதிர்மாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கொடூரமான செயல்களை நாகரீகமடைந்த சமூகம் ஏற்காது.
பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு, இந்த வழக்கில் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
56 வயதான ஜோதிர்மாய் கடந்த 20 ஆண்டுகளாக கிரைம் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். பல நிழலுக தாதாக்கள், கிரிமினல்கள் குற்றவாளிகள் குறித்த செய்திகளை அவர் தொடர்ந்து கொடுத்தபடி இருந்தார். இதற்காக அவர் பல துணிச்சலான காரியங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
அவரை மும்பைப் புறநகர்ப் பகுதியான போவாய் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டுத் தப்பியது. மோட்டார் சைக்கிளில் ஜோதிர்மாய் வந்தபோது இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications