மதுரை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: 550 கோழிகள் பலி
மதுரை: மதுரை அருகே உள்ள ஒரு கோழி்ப்பண்ணையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த 550 கோழிகள் தீயில் கருகி பலியானது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது விராலிப்பட்டி. இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ஆனந்தன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இவரது கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் கோழிப்பண்ணை முழுவதும் தீ வேதமாக பரவியது.
இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 550 கோழிகள் உடல் கருகி பலியாகின. மேலும் அங்கிருந்த கோழித் தீவணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து சோழவந்தான், வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications