ஆ. ராசாவை நீலகிரி எம்.பி. பதவியில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிமுக கோரிக்கை
குன்னூர்: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி திகார் சிறையில் உள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை நீலகிரி எம்.பி. பதவியில் இருந்து நீக்குமாறு மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மனு அனுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் என்பவர் மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது,
நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் கடந்த 130 நாட்களாக மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 101 (4)-ன் படி, மக்களவை உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் அனுமதியில்லாமல், 60 நாட்கள் மக்களவை கூட்டத்தில் பங்கேற்கவில்லையெனில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும், அந்த தொகுதியை காலி தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
மேலும் நீலகிரி எம்.பி. ஆ. ராசா கடந்த 130 நாட்களுக்கு மேலாக மக்களவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உள்ளார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications