இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு; பயணிகள் கப்பலை நிறுத்த வேண்டும்- பிரதமரிடம் ஜெ. கோரிக்கை

முன்னதாக துவக்க விழாவை தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் புறக்கணித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிளமிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் 'ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பலை தூத்துக்குடி-கொழும்பு இடையே இயக்குறது. இந்தக் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஆனால், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் கப்பல் சேவை துவக்க விழா அழைப்பிதழில் பெயர் இடம் பெற்றிருந்தும் கூட தூத்துக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் இந்த விழாவை புறக்கணித்துவிட்டனர்.
இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, தவறான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கப்பல் சேவையை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமரிடம் அவர் அளித்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழவும், முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாக மறு குடியேற்றம் செய்யப்படவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த பிற நாடுகளுடன் இணைந்து இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக மக்கள் பெரிதும் ஆதரித்துள்ளனர். இந் நிலையில், தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் மிகத் தவறான நேரத்தில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு அனுப்ப கோரிக்கை:
இலங்கையில் சிங்களருக்கு இணையான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப் வேண்டும். முகாம்களில் உள்ள தமிழகர்கள் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல் தெரிந்தாக வேண்டும்.
தமிழகர்கள் பற்றிய விவரங்கள் இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. எனவே இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய எம்எல்ஏக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று அதில் கோரியுள்ளார் ஜெயலலிதா.
முன்னதாக நேற்று மாலை இந்த கப்பல் சேவையை துவக்கி வைத்து வாசன் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1907 ஜூன் மாதம் இரு சுதேசி கப்பல்களை வ.உ.சி. இயக்கினார். பின்னர், அது ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இங்கிருந்து கொழும்பிவுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வ.உ.சி. கண்ட கனவு நிறைவேறியுள்ளது.
இந்த விழா தொடர்பாக மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, துறைமுகத் தலைவர் மூலம் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அங்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
விரைவில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கான, ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
கட்டண விவரம்:
ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பலில் கொழும்பு செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,990, அதிகபட்ச கட்டணம் ரூ. 19,550 ஆகும்.
கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,128, அதிகபட்ச கட்டணம் ரூ. 20,470 ஆகும்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications