2ஜி விவகாரத்தில் தொடர்பு கொண்ட ப.சிதம்பரம் விலகியே தீர வேண்டும்-பாஜக

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரமும் பலனடைந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரியான ராஜா என்பவர் நீரா ராடியாடவுன் தொலைபேசியில் பேசிய பேச்சு விவரம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ராஜாவின் பேச்சு தவறானது, அவதூறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் உடனடியாக மறுத்து விட்டது.
இந்த நிலையில் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2ஜி அலைக்கற்றையை 2001-ம் ஆண்டு விற்ற விலையில் 2008-ம் ஆண்டு விற்கக்கூடாது என 2007-ம் ஆண்டு டிசம்பர் வரை மத்திய நிதியமைச்சகம் கடிதங்கள், அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வந்தது. நடப்பு சந்தை விலையை கருத்தில் கொண்டு அரசுக்கு சாதகமான விலையில்தான் விற்கவேண்டும் எனவும் நிர்பந்தித்து வந்தது.
ஆனால், 2008 ஜனவரி 15-ம் தேதி அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். அதாவது எதிர்காலத்தில் ஏல முறையை பின்பற்றியே அலைக்கற்றையை விற்கவேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இப்படி தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டதற்கு காரணம் என்ன என்று அவர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இது கவனக்குறைவாகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ நடந்ததாக கருத முடியாது.
பிறரது விருப்பத்திற்கிணங்க அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டதாகவே கருதுகிறோம். இதன் மூலம் 2008 ஜனவரி 15-ம் தேதி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து அப்போதைய அமைச்சர் ஆ.ராசா பிறப்பித்த உத்தரவுக்கு நிதியமைச்சர் ஒப்புதல் அளித்ததாகவே கருதுகிறோம்.
அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கை சந்தித்துவரும் வி.பாலசுப்பிரமணியம் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடமிருந்து மறுப்பு வருகிறது. இது குறித்து பாஜக மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுபோல அவர் மறுப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, தான் திடீரென மனதை மாற்றிக்கொண்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கத் தயாரா? இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றவாளி யார் என அறிவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அப்போதைய தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், நிதியமைச்சரும் 2001-ம் ஆண்டு விலையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றையை விற்கலாம் என ஒப்புதல் அளித்திருந்ததால் பிரதமரும் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப. சிதம்பரம் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications