இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை
லண்டன்: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் இந்தக் கோரிக்கையால், இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவத்தினர் அரங்கேற்றிய வக்கிரமான, குரூரமான, கோரமான கொலை வெறி இனவெறித் தாக்குதல்கள் உலக மக்களை பதை பதைக்க வைத்தன. ஆனாலும் இதுவரை இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்து வைக்க உலக நாடுகள் முன்வராத அவல நிலை உள்ளது.
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சிகரமான வீடியோப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்த வீடியோ காட்சிகளை ஒரு டாக்குமெண்டரி போல தொகுத்துள்ளது சானல் 4 தொலைக்காட்சி. இதை சானல் 4 தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இதுகுறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். இதை ஏற்காவிட்டால், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications