தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல்; ரூ.9 லட்சம் அபராதம்
புனே: நாசிக் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ 9 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2000-2001-ம் ஆண்டுகளில் முத்திரைத் தாள் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்துல்கரீம் தெல்கி என்பவர் முத்திரைத் தாள்களை போலியாக அச்சடித்து பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது தெரிய வந்தது. அவர் மீது நாடெங்கும் பல நகரங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு கைதான தெல்கி கடந்த 10 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீது 120(பி), 255, 256, 257, 258, 259 உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் உள்ளதால் அவர் விடுதலை ஆக முடியாமல் உள்ளார். தற்போது அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முலண்ட் நீதிமன்றம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 17.05 லட்சம் அபராதமும் விதித்தது.
இதற்கிடையே புனே நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் நடந்து வந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சர்தே சாய், போலி முத்திரை தாள் தயாரித்ததற்காக தெல்கிக்கு 10 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதித்துள்ளதாகக் கூறினார்.
அதோடு தெல்கிக்கு ரூ. 9 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 6 ஆண்டு ஜெயில் தண்டனையை தெல்கி ஏற்கெனவே அனுபவித்து விட்டார். எனவே மேலும் 4 ஆண்டுகள் அவர் சிறைக்குள் இருக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications