பிரதமர் மீதான ஊழல் புகார்களை அவர் விலகிய பின்னர் விசாரிக்கலாம்-கபில் சிபல்

Subscribe to Oneindia Tamil

Kapil Sibal
டெல்லி: ஒரு பிரதமர் மீதான ஊழல் புகார்களை அவர் பதவியில் இருக்கும்போது விசாரிக்க முடியாது. ஆனால் அவர் பதவியிலிருந்து விலகிய பின்னரோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், லோக்பால் மசோதாவில் எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை. மொத்தம் உள்ள 40 அம்சங்களில் 36 அம்சங்கள் குறித்து அரசுத் தரப்புக்கும், மக்கள் இயக்க குழுக்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பும் தனித் தனி மசோதாக்களை உருவாக்கி அதை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மசோதா வரைவுக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் குழு மற்றும் அன்னா ஹஸாரே தலைமையிலான குழுவின் கருத்துக்களைப் பெற்று அது குறித்து பரிசீலித்து அவற்றை மசோதாவில் இடம்பெறச் செய்வோம்.

லோக்பால் மசோதா, பிரதமர் அலுவலகத்திற்குப் பொருந்தாது. பதவியில் உள்ள பிரதமர்கள் மீது ஊழல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேசமயம், பிரதமர் பதவி விலகிய பின்னரோ அல்லது அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரோ நடவடிக்கை எடுக்கலாம்.

ராம்தேவ் விவகாரத்தில் அரசின் நிலை சரியானதே. இதற்காக நாங்கள் எந்த வருத்தமும் படவில்லை. உண்மையைச் சொல்வதாக இருந்தால் நாங்கள் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம் என்றார் சிபல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+