Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபியில் இரண்டே நாட்களில் 5 பெண்கள் கற்பழிப்பு: பெண்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

இடா: உத்தரபிரதேசத்தில் 35 வயது விதவையை ஒரு கும்பல் கற்பழித்து, தீ வைத்துவிட்டு கொன்றுவி்ட்டு தப்பியோடிவிட்டது. மேலும் பிரோசாபாத் பகுதியில் 2 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 5-வது கற்பழிப்பாகும்.

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தான் ராணிபூர் பெலாடி கிராமத்தில் ஒரு 18 வயது இளம் தலித் பெண் கற்பழிக்கப்பட்டார். அதே நாளில் 14 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளது. போராடிய அப்பெண்ணைத் தாக்கி, கண்களை சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியது.

இந்த சம்பவங்களால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே இன்று நிதௌலி பகுதியில் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் இருந்த விதவையை(35) சபாபூர் கிராமத்தைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள் 3 பேர் கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தனர். அவர் உயிர் ஊசலாடியபோது அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இநத சம்பவத்தில் அந்த விதவைத் தாய் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார். இது குறித்து அந்த பெண்ணின் மைத்துனன் அனில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசாரோ இது கொலையல்ல, தற்கொலை என்கின்றனர்.

இது குறித்து இறந்தவரின் சகோதரர் விர்சே கூறியதாவது,

5 பேர் எனது சகோதரியின் கழுத்தை நெறித்துள்ளனர், பின்பு அவரை கற்பழித்துள்ளனர். என் சகோதரி அவர்களை அடையாளம் காட்டிவிடுவார் என்பதால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அவர் இறக்கும் தருவாயில் அங்கிருந்து தப்பிவிட்டனர் என்றார்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு டிஜிபி பிரிஜ் லால் நிருபர்களிடம் கூறியதாவது,

2.30 மணி அளவில் ஷிஷுபால் யாதவ் வீட்டிற்குள் 5 பேர் நுழைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேரின் பெயர் சுனில் யாதவ், சுமன் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் என்று அந்த பெண் சாகும் முன் கூறினார்.

வந்தவர்களில் சுனில் மட்டும் தான் தன்னை கற்பழித்ததாகக் கூறினார். அவர் கூச்சலிட்டவுடன் அவர்கள் அந்த பெண் மீது தீ வைத்தனர். சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இந்த கொடுமை ஒரு புறம் இருக்க பிரோசாபாத்தில் இரண்டு இளம்பெண்கள் இன்று கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து கடந்த 2 நாட்களில் 5 கற்பழிப்புகள் நடந்துள்ளன.

பிரோசாபாத்தில் 15 வயது பெண் ஒருவரை அவருடன் தொடர்பு வைத்திருந்த ஷனு என்பவரும், அவரது உதவியாளர் கடுஆ என்பவரும் சேர்ந்து கற்பழித்துள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரில் ஷனு கைது செய்யப்பட்டார்.

கோண்டாவில் ஆஷா என்னும் 16 வயது பெண் கடந்த 17-ம் தேதி முதல் காணாமல் போனார். இந்நிலையில் கைதோலி கிராமத்தில் உள்ள வயலில் நேற்று மாலை ஆஷா பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை யாரோ கற்பழித்துக் கொன்றுள்ளனர்.

ஆஷாவின் தந்தை நன்கே, மிடாஹிலால் மற்றும் பகதூர் ஆகிய 3 பேருக்கு எதிராக புகார் கொடுத்தார். அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+