தாந்தோன்றிமலை திமுக கவுன்சிலர் ரவி மீது கொலை மிரட்டல் வழக்கு
கரூர்: நகர்மன்ற கூட்டத்தில் அதிகாரியை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த தாந்தோன்றிமலை திமுக கவுன்சிலர் ரவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாந்தோன்றிமலை நகர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் ரேவதி ஜெயராஜ் (அதிமுக) தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது முன்னாள் நகர் மன்ற தலைவரும், 3 வது வார்டு திமுக கவுன்சிலருமான பெ. ரவி நகர் மன்ற நிர்வாகத்தையும், நகராட்சி செயல் அலுவலர் (பொ) ராஜாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு நகர் மன்றத் தலைவர் ரேவதி ஜெயராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நகர் மன்ற அலுவலகத்தில் நள்ளிரவில் அதிகாரிகள் சிலர் பெண்களுடன் வந்து செல்வதாக ரவி குற்றம் சாட்டினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி தலைவர் ரேவதி ஜெயராஜ் கூட்டத்தை முடித்தார்.
இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் திமுக கவுன்சிலர் ரவி தன்னை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி தாந்தோன்றிமலை நகராட்சி செயல் அலுவலர் சி. ராஜா பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் திமுக கவுன்சிலர் ரவி மீது ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications