நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: முக்கிய காரணம் கருதி நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று (19ம் தேதி) மாலை 5 மணிக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் (எண்-06304) ரத்து செய்யப்பட்டது.
அதே போன்று, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று (20ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (எண்-06303) சில காரணங்கள் கருதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications