சேலத்தில் +2 மாணவன் தற்கொலை: ஒரு ஆசிரியர் கைது, 3 பேர் தலைமறைவு
சேலம்: சேலம் பனைமரத்துப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்று ஆசிரியர்கள் திடீர் என்று தலைமறைவாகிவிட்டனர்.
சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவர் சீனிவாசன். பாடத்தில் சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் தன்னை மிரட்டியதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கடிதத்தில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து மாணவன் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, கடிதத்தில் குறிப்பிட்ட கணித ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இதனையறிந்த மற்ற ஆசியர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications