60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்
தர்மபுரி: 60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஒகனேக்கல், சின்னாறு பகுதியில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அப்பகுதியில் போலீஸார் சிலர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சின்னாற்றின் கரையில், ஒருவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினர்.
பின்னர் அவரை ஒகனேக்கல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாருக்கு வியப்பளிக்கும் தகவலை வெளியிட்டார் அந்த நபர்.
தற்கொலைக்கு முயன்ற நபரின் பெயர் திருப்பதி. 35 வயதாகிறது. இவருக்கு சொந்த ஊர் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பட்டிமரத்தள்ளி கிராமம்.
பெங்களூரில் இரும்புக் கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் பழக்கமானார்.
தொலைபேசி மூலம் கிடைத்த இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்தக் காதலை தொடர்ந்து வந்த அதே வேளையில், செல்வி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு மணந்துள்ளார் திருப்பதி. மேலும் தொலைபேசிக் காதலையும் தொடர்ந்துள்ளார்.
இப்படியே போனால் எப்படி என்று சமீபத்தில் லூர்து மேரியை திருப்பதி சந்தித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் போன் மூலம் காதலித்து வந்த பெண் லூர்து மேரி இளம் பெண் அல்ல, மாறாக 60 வயதான பேரிளம்பெண் என்பதை அறிந்து திடுக்கிட்டார்.
இந்த ஏடா கூட காதலை அவரால் சகிக்க முடியவில்லை. மன உளைச்சலுக்குள்ளானார். இதனால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருப்பதியின் சோகக் கதையைக் கேட்டு நொந்து போன போலீஸார் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, திருப்பதிக்கு நிறைய புத்திமதிகளைச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications