லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கோரி அத்வானியுடன் அன்னா ஹஸாரே சந்திப்பு

அன்னாவுடன், கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரும் சென்றிருந்தனர். இவர்கள் அத்வானியைச் சந்தித்து, லோக்பால் மசோதாவுக்கான கூட்டுக் குழுவின் கூட்டங்களில் நடந்த விவாதங்கள் உள்ளிட்டவை விளக்கிக் கூறினர். பின்னர் அரசு பரிந்துரைத்துள்ள ஜன் லோக்பால் மசோதா குறித்த தங்களது நிலையையும் அவர்கள் விளக்கினர்.
பின்னர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சந்திப்பு மிகவும் ஆறுதலாக இருந்தது. நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது. சக்தி வாய்ந்த லோக்பால் நமது நாட்டுக்குத் தேவை என்று அத்வானி கூறினார். நாங்கள் கூறியதை சிரத்தையுடன் கேட்டுக் கொகண்டார். மேலும், பாஜக மூத்த தலைவர்களிடம் எங்களது வாதத்தை விரிவாக எடுத்துக் கூறுமாறும் கேட்டுக் கொண்டார் என்றார்.
சிசோடியா கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்பு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து எங்களது நிலையை விவரிக்கவுள்ளோம்.
இந்த சமயத்தில் பாஜகவிடமிருந்து எந்தவிதமான வாக்குறுதிகளையும், உத்தரவாதத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களது கருத்துக்களை அத்வானியிடம் எடுத்து வைத்தோம் என்றார்.
லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவிருப்பதாக ஏற்கனவே ஹஸாரே குழுவினர் கூறியிருந்தனர். அந்த அடிப்படையில் இன்று அத்வானியை அவர்கள் சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications