சென்னையில் ரவுடிகள் களையெடுப்பு தீவிரம்-40 நாளில் 60 பேருக்கு குண்டாஸ்
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் சென்னை நகரில் ரவுடிகள் களையெடுப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. 40 நாட்களில் மட்டும் 60 பேரை தூக்கி குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மாமூல் வாங்குபவர்கள் 14 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் 15 பேர், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் 13 பேர், திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 14 பேர்.
இது தவிர விபச்சார புரோக்கர்கள் ஒருவரும், திருட்டு விசிடி வியாபாரம் செய்தவர்கள் 3 பேரும் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications