ஒரு பஸ் அளவிலான விண்கல் நாளை பூமியைக் கடந்து செல்கிறது

Subscribe to Oneindia Tamil

Asteroid 2011 MD
டெல்லி: ஒரு பஸ்ஸின் அளவிலான விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்கல், நாளை பூமியைக் கடந்து செல்லவுள்ளது.

தற்போது இந்த விண் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு வெகு அருகே கடந்து செல்லவுள்ளது.

இந்தப் புதிய விண்கல்லுக்கு 2011எம்டி என்று பெயரிட்டுள்ளனர். ஒரு பஸ் சைஸுக்கு இது இருக்கிறது. நாளை இந்த விண்கல், பூமியிலிருந்து 12,000 கிலோமீட்டர் தொலைவில், கடந்து செல்லவுள்ளது. நாளை காலை சரியாக 6.56 மணிக்கு இந்த விண்கல் பூமியைக் கடக்கும்.

இந்த விண்கல், தெற்கு அட்லான்டிக் கடல் பரப்புக்கு மேலே இந்த விண்கல் பூமியைக் கடக்கும். பூமியைக் கடந்து செல்லும்போது விண்வெளியில் உலா வந்து கொண்டிருக்கும் பல்வேறு செயற்கைக் கோள்களுக்கு ஊடாக இது செல்லும். இருப்பினும் இதனால் செயற்கைக் கோள்களுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

பத்து மீட்டர் அளவில் இந்த விண்கல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியைக் கடக்கும்போது அதை டெலஸ்கோப் மூலம் காண முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்தான் மெக்ஸிகோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த விண்கல்லைக் கண்டறிந்தனர்.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாஸா தெரிவித்துள்ளது. மேலும், இந்த விண்கல் பூமியின் எல்லைக்குள் நுழைந்தால் அடுத்த விநாடியே அது எரிந்து போய் விடும், சாம்பல்தான் பூமியை வந்தடையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+