மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஜூன் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
லாரி உதிரி பாகங்கள், டயர் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே லாரி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் டீசல் விலையை ரூ.3 அதிகரிப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் பல்வேறு விதமான வரிகளால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. இந்த வரிகளை குறைப்பதால் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியும். ஆனால், அத்தகைய நடவடிக்கையில் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஈடுபடுவதில்லை.
இப்போது ஒரு லிட்டர் டீசலுக்கு உயர்த்தப்பட்டுள்ள ரூ.3-க்கு தமிழக அரசு சார்பில் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும். இதனால் டீசல் விலை மேலும் 66 காசுகள் உயரும். மத்திய அரசு விரி விலக்கு அளிக்காவிட்டாலும், மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும்.
டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 27ம் தேதி திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளும், மத்திய அரசின் உயரதிகாரிகளும் பங்கேற்பர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவர் என்றார் நல்லதம்பி.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications