தமிழ் தேசியக் கூட்டணிக்கு மீண்டும் திரும்பும் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா
வவுனியா: இலங்கை அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற டெலோ தலைவர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் மீண்டும் கூட்டணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
ஈழத்தில் பல லட்சம் பேரைக் கொன்று குவித்து முடித்த பின்னர் அதிபர் தேர்தலை நடத்தினார் ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக, ஈழப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக பலியா காரணமான ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்து வந்த சரத் பொன்சேகா எதிர்த்துப் போட்டியிட்டார்.
இதையடுத்து பொன்சேகாவை ஆதரிக்க தமிழர் கட்சிகள் பலவும் முடிவு செய்தன. இந்த நிலையில் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெலோ தலைவர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரிந்து சென்று தனியாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது தங்களது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் திரும்ப இந்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் வர வேண்டும் என்று கோரி டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் இந்த இரு தலைவர்களையும் வற்புறுத்தி வந்தனர். மேலும், டெலோ அமைப்பின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் எம்.பியாக இருப்பவருமான செல்வம் அடைக்கலநாதனுடன் இவர்கள் பேசவும் ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது தமிழ் தேசியக் கூட்டணியில் இணைய சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் முடிவு செய்துள்ளனர்.
சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது கூட்டணியை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications