பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு: மதுபாட்டில்கள் உடைப்பு
விகேபுரம்: குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. வன சோதனைச் சாவடிகளி்ல் சோதனைக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் ஆமை வேகத்தில் போக்குவரத்து நகர்ந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசத்தில் அகஸ்தியர் அருவியும், பாபநாசம் அணைப்பகுதியில் பாணதீர்த்த அருவியும் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் கணிசமாக இருக்கும். நேற்று விடுமுறை நாள் என்பதாலும், குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததாலும் பாபநாசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வனவர் சுப்புராவ் தலைமையில் வனக்காப்பாளர் முருகேசன், பிச்சை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். நேற்று காலையிலிருந்து மதியம் வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாறையில் உடைக்கப்பட்டது.
வனப்பகுதிக்கு மதுபானங்கள் கொண்டு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தும் அதை மீறி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானத்துடன் வருகின்றனர். நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் வந்த கார்கள் சோதனைச் சாவடிகளில் இருந்து பாரபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications