சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி பலாத்காரம்: கூலித் தொழிலாளி கைது
நெல்லை: சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் இன்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அபிராமி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவரது தந்தை மாடசாமி நெல்லை பழைய பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். அவரை பார்க்க கடந்த 5-ம் தேதி சுந்தர்ராஜன் பழைய பேட்டை பகுதிக்கு வந்தார். அப்போது அவரது தந்தையின் வீட்டருகே ஏராளமான சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 2-ம் வகப்பு படிக்கும் 7 வயது சிறுமியான செல்வியை பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு சபலம் ஏற்பட்டது. அவர் சிறுமியிடம் நைசாக பேசி தனது தந்தையின் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விளையாடச் சென்ற தனது மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின தாய் தேடினார். அப்போது சிறுமி அழுது கொண்டே ஓடி வந்தாள். அவளிடம் விசாரித்தபோது சுந்தர்ராஜன் தன்னிடம் தவறாக நடந்தது குறித்து தாயிடம் கூறினாள். சுந்தர்ராஜனை கண்டிக்க அப்பகுதியினர் திரண்டு சென்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலா, ராபர்ட் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுந்தர்ராஜனை போலீசார் இன்று கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications