ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- திருமா

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது சமுக விரோத கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது போன்று தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தலித் தலைவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளி்க்க வேண்டும்.
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை. அப்போது தான் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனை சர்வதேச சிக்கல்கள் நிறைந்தது. இந்த விஷயத்தில் இலங்கைக்கு சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளது.
எனவே மத்திய அரசு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் திமுக அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் தான் அதனால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு மத்திய அரசை வலியுறுத்த முடியவில்லை என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications