Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு: பணிந்தார் ராஜபக்சே-வக்கீலை அனுப்புகிறார்!

Subscribe to Oneindia Tamil

Rajapakse
கொழும்பு: அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் அனுப்ப்பட்ட சம்மனை ஏற்க மறுத்து வந்த அதிபர் ராஜபக்சே பணிந்தார். தற்போது அவர் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு செய்து உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபை குழு குற்றம் சாட்டி உள்ளது.

இந்த போரின் போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன

போர்க்குற்ற வழக்கு

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். 'இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இலங்கை முப்படைகளின் தலைவர் என்ற முறையில், போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல், மற்றும் சித்ரவதை படுகொலைகளுக்கு ராஜபக்சேவே பொறுப்பு என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ரு.150 கோடி நஷ்ட ஈடு

மேலும் 2006-ம் ஆண்டு போரின் போது திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான ராஜீகர் மனோகரன், பசிப்பிணிக்கு எதிரான அமைப்பில் பலியான 17 ஊழியர்களில் ஒருவரான ஆனந்தராஜா, இறுதி கட்ட போரின் போது பாதுகாக்கப்பட்ட பகுதியில் பதுங்கு குழியில் கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்பவரின் உறவினர் ஆகிய மூன்று பேருடைய குடும்பத்துக்கும் ராஜபக்சே ரூ.150 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

ராஜபக்சேவுக்கு சம்மன்

இந்த வழக்கில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார். உரிய பதில் அளிக்காவிட்டால் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த சம்மனை இலங்கை அரசு உதாசீனப்படுத்தியது. இலங்கை அரசுக்கும் அதிபருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக, வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசு பணிந்தது

இந்த சம்மனுக்கு பதில் அளிக்கத் தேவை இல்லை என்றும், இலங்கையின் சட்டப்படி இது போன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருக்க அதிபருக்கு விதிவிலக்கு உண்டு என்றும், வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.

ஆனால், இதன் மூலம் அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அதன் மூலம் உலக அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் இலங்கை அரசு பணிந்தது.

வக்கீலை நியமிக்க முடிவு

இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய நீதித்துறை அதிகாரிகள், அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜபக்சே சார்பில் ஆஜராக அந்த நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை நியமிக்க முடிவு செய்தனர்.

இந்த வழக்கில் அதிபரின் நலனை பாதுகாப்பதற்காக, அவர் சார்பில் அமெரிக்காவில் உள்ள வக்கீல் ஒருவர் ஆஜர் ஆவார் என்று, நீதித்துறை செயலாளர் சுதா காம்லத் நேற்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம் முதல்முறையாக, ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் நீதிமன்றம் மூலம் அம்பலத்துக்கு வருகின்றன. விரைவில் சர்வதேச நீதிமன்றம் மூலம் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பும் முயற்சியில் தமிழர்கள் தீவிரமாக உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+