கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவோம்: பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி பாஜகவினர் கடல் முற்றுகை போராட்டம் நடத்துவோம். அப்படியும் தீர்வு காணப்படவில்லை என்றால் கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறி்தது அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது,

ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து இந்தியா எந்தவித நிர்பந்தனையும் விதிக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையில் டக்லஸ் தேவானந்தாவின் பரிந்துரைப்படி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு இந்தியாவில் இருந்து சென்ற 2 அதிகாரிகளும் ராஜபக்சேவிடம் கையேந்தியது இந்தாயவை தலைகுனிய வைத்துள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய அதிகாரிகள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதைக் கூட தடுக்க முடியாமல் மத்திய அரசு திணறுவது வெட்கக்கேடனாது.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக பாஜகவினர் கடல் முற்றுகை போராட்டம் நடத்துவோம். அப்படியும் தீர்வு காணப்படவில்லை என்றால் கச்சத் தீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் போராட்டம் நடத்துவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+