நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர் கைது
நெல்லை: நெற்கட்டும்செவல் அருகே நகைக்காக மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் எழில்நகரைச் சேர்ந்தவர் ஐயம்மாள் (65). அவருக்கு நெற்கட்டும்செவல் அருகில் உள்ள கண்டிகைபேரி ஊரின் தெற்கில் சொந்த தோட்டம் உள்ளது. அவர் கடந்த மாதம் 3-ம் தேதி வழக்கம் போல் தோட்டத்திற்கு சென்றுள்ளார். சென்றவர் சென்றவர் தான் வீடு திரும்பவில்லை.
மறுநாள் ஐயம்மாளின் மகன் ராஜா தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிணற்று பம்பு செட்டில் அய்யம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயின், 5 பவுன் எடையுள்ள ஒரு ஜோடி பாம்படம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்.
இது தொடர்பாக ராஜா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி மதிவாணன் தலைமையில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கரிவலம்வந்த நல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரயில்வே நிலையம் அருகில் இவர்களைக் கண்டதும் ஒருவன் ஓடியுள்ளான். உடனே சந்தேகித்த போலீசார் அவனை விரட்டிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் கீழப்புதூர் வடக்கு தெருவை சேர்ந்த கோட்டூர்சாமியி்ன் மகன் அசோக் (எ) அசோக்குட்டி (23) என தெரிய வந்தது.
அவனிடம் இருந்து செயின், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவனை கைது செய்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications