திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் கைது
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவியைக் கடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இவர், கரூரைச் சேர்ந்த சக மாணவியின் அண்ணன் ஜெயகாந்தன் என்பவரை காதலித்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி கல்லூரி விடுமுறை என்பதால் ஊருக்குச் செல்வதற்காக மல்லிகா திருச்சி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை பேருந்தில் ஏற்றிவிட ஜெயகாந்தனும் சென்றுள்ளார்.
இரவு நேரமாகிவிட்டதால் ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஊருக்குப் போக முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த லாட்ஜிலும் அறை கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சாலை ஓரத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், ஜெயகாந்தனை விரட்டிவிட்டு மல்லிகாவை காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து ஜெயகாந்தன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து காவல் நிலையத்திற்கும், செக்போஸ்ட்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தன்னை போலீசார் தேடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், மல்லிகாவை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
புதுக்கோட்டையில் மல்லிகாவை மீட்ட போலீசார் அவரை திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்பு மல்லிகாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த இன்ஸ்பெக்டர் கண்ணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications