அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவருக்கும், சோனியா காந்திக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று பிரதமரின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications