நில அபகரிப்பு வழக்கு-வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு முன்ஜாமீன் மறுப்பு
சேலம்: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஏ.ராஜாவுக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
ராஜா மீது முத்துக்குமார் என்பவர் சேலம் சரக டிஐஜி வெங்கட்ராமனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், ராஜா மீது அவர் நில அபகரிப்புப் புகாரை கூறியிருந்தார். மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென மீண்டும் டிஐஜியை சந்தித்த முத்துக்குமார் தனது புகாரை திரும்பப் பெறுவதாக கூறி மனு கொடுத்தார்.
இருப்பினும் சேலம் போலீஸார் ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராஜா. இதை நேற்று விசாரித்த நீதிபதி பாஸ்கர், விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள போலீஸாரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜாவைக் கைது செய்ய போலீஸார் மும்முரமாக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications