இஸ்ரோ- ஆண்ட்ரிக்ஸ் தலைவராக விஞ்ஞானி ஹெக்டே நியமனம்
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராச்சி மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக வி.எஸ். ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய செயற்கைக் கோள்களில் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு திவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக புகாரில் சிக்கியது இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சொற்ப லாபமே ஈட்டும் இந்த நிறுவனம் தனது லாபத்தில் இருந்து சுமார் 8 சதவீத பணத்தை ஒதுக்கி, அதில் தலா 4 கிராம் எடை கொண்ட 15,600 தங்க காசுகளை வாங்கி அதை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிக் கொண்டது.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த அமைப்பின் தலைவராக இப்போது ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் தொலையுணர்வு செயற்கைககோள்கள் பயன்பாடுகள் திட்டத்தின் (Remote sensing applications) மூத்த விஞ்ஞானியாவார்.
மேலும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் அறிவியல் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது நியமனம் குறித்த அறிவிப்பை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று பெங்களூரில் வெளியிட்டார். இதற்கு முன் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு முழு நேரத் தலைவர் இருந்ததில்லை. அந்தப் பொறுப்பை இஸ்ரோ தலைவரே கவனித்து வந்தார்.
இந் நிலையில் பல சிக்கல்களி்ல் இந்த அமைப்பு மாட்டியதால், அதற்கு தனியாக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications