ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி

ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஏற்பட்ட பெரும் பூகம்பம் மற்றும் சுனாமியிலிருந்தே இன்னும் ஜப்பான் மீளவில்லை.
இந்த நிலையில் ஜப்பானின் இவாட் மாகாணத்தில் உள்ள ஹோன்ஷு தீவில் இன்று காலை 9.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பயந்துபோன மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதற்கிடையே, கடல் அலைகள் வழக்கத்தை விட சுமார் 50 செ.மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
எனவே, பசிபிக் கடல் பிராந்தியம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா, இவாடே, மியாகி ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அணுஉலைகள் வெடிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் தங்களுக்கு இது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை என டோக்கியோ அணுமின் நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தும் முன் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், அணுஉலைகளை குளிர்வித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் கடற்கரை பகுதியில் பூமிக்கு கீழே 10 கி. மீட்டர் ஆழத்தில் உருவானதாக தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத மதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications