தெற்கு சூடானில் இந்திய தூதரகம்!

Subscribe to Oneindia Tamil

ஜூபா: தெற்கு சூடானில் விரைவில் இந்தியா தூதரகம் அமைக்கும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

நீண்ட நெடிய உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு தெற்கு சூடான் குடியரசாக மலர்ந்துள்ளது. இந்த நாட்டுக்கு இந்தியாவும் அங்கீகாரம் அளித்துள்ளது.

புதிய நாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய நாட்டுடன் விரைவில் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை இந்தியா துவங்கியுள்ளது. தெற்கு சூடானின் தலை நகரான ஜூபாவில் இந்த தூதரகத்தை அமைக்கிறது இந்தியா.

சூடானின் தற்போதைய இந்திய தூதராக உள்ள ஏகே பாண்டே, புதிய நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ள சல்வா கிர்-க்கு வாழ்த்து கூறுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.

உலகின் 193வது நாடாக மலர்ந்துள்ளது தெற்கு சூடான். ஆப்ரிக்காவின் 54வது சுதந்திர நாடு இது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் தெற்கு சூடானில் தூதரகங்களை அமைக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+