137 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளிலும் இன்று சரிவு காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிந்து 18,721 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, இன்போசிஸ், மாருதி சுஸுகி, பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், மகேந்திரா அன் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச் சந்தை நிப்டியில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் 44 புள்ளிகள் சரிந்து 5,616 புள்ளிகளில் முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications