தமிழ் ஈழ சுதந்திரத்தின் நுழைவாயிலாகட்டும் தெற்கு சூடான்! - வைகோ

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:
இனப் படுகொலைக்கு ஆளாகி தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமைத்தனத்தை முறித்து தங்கள் மண்ணை சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக்கொண்டதை கோலாகலமாக கொண்டாடி மகிழும் கருப்பர் இன மக்களை காணும்போது ஈழத் தமிழர்களும் அவர்தம் பிள்ளைகளும் இப்படி சுதந்திர நாள் விரைவில் மலராதா என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.
சூடான் அதிபர் அல் பசீர் நடத்திய இனப் படுகொலை குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றம் அவரை இன கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்தது.
இதேபோன்று லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அவரது கூட்டாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், அதற்குரிய நடவடிக்கையை ஐநா மன்றமும் உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்குப்பதிவு சர்வதேச பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். இதனை தெற்கு சூடான் உதயமான ஜூலை 9ம் நாளன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம். தெற்கு சூடானின் உதயம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான நுழைவாயில் ஆகட்டும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜெ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-நாஞ்சில் சம்பத்:
இந் நிலையில் நெல்லையில் மதிமுகவின் 18வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,
சமச்சீர் கல்வி திட்டத்தில் என்ன குற்றம். கலைஞர் ஆட்சியில் அவர் கொண்டு வந்த திட்டங்களில் உன்னதமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம் மட்டும்தான். சமச்சீர் கல்வி தற்போது தடை செய்யப்பட்டிருப்பதால், 80 லட்சம் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கூட்டத்தின் வாயிலாக சொல்கிறேன் இதற்கு ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சமச்சீர் கல்வி குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications