சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு-உஷார் நிலை
சென்னை மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வருகையையொட்டி அங்கு ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி விமான நிலைய வளாகத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்காமல் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டருடன் படம் பார்க்க வருபவர்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரின் எல்லைப்புறச் சாலைகளில் தீவிர வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்ளும் வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்கலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications