மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்
திருச்சி: திருச்சியில், 8ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்த தமிழ் ஆசிரியரை, அடியாட்களை கூட்டிக் கொண்டு போய் சரமாரியாக அடித்து உதைத்தனர் பெற்றோர்கள். தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி உதை விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, வண்ணாரப்பேட்டையில் சி.இ மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக இருப்பவர் பன்னீர். இவர் தான் பாடம் சொல்லித் தரும் 8ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியுற்ற அந்த மாணவி தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற பெற்றோர், பலரை கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர். ஆசிரியர் பன்னீரைப் பார்த்து அவரை சரமாரியாக திட்டியபடி அடித்து உதைத்தனர்.
கிட்டத்தட்ட 30 பேர் சேர்ந்து ஆசிரியரை அடிப்பதைப் பார்த்த சக ஆசிரியர்கள் ஓடி வந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து தாக்கியவர்கள விலக்கி விட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications