மும்பை குண்டுவெடிப்பு எதிரொலி- தென்மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
நெல்லை: மும்பை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து தென்மாவட்டங்களில் போலீஸ் ரோந்து பணி, சோதனை சாவடிகளில் வாகன சோதனைகள் ஆகியவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பில் 22 பேர் பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய உளவு துறையினர் அனைத்து மாநில உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக போலீஸ் டிஜிபி ராமனூஜம், சட்டம் ஓழுங்கு துணை கமிஷனர் ஜார்ஜ், உளவுத்துறை ஏடிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களில் போலீசார் ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உளவுத்துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் பாதுகாப்பு
தென்மண்டல ஐஜி மஞ்சுநாதா உத்தரவின்பேரில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சரக டிஐஜி பொறுப்பு வரதராஜூலு உத்தரவின்பேரில் நெல்லை மாநகரம், மாவட்டம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிக்கள் நெல்லை வியேந்திர பிதாரி, தூத்துக்குடி நாரேந்திர நாயர், கன்னியாகுமரி அருண், மாநகரத்தில் துணை கமிஷனர்கள் மார்க்ஸ் ஸ்டான்லியோ ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் புளியரை, காவல்கிணறு, கங்கைகொண்டான் மற்றும் மாநகரத்தில் பாளை டக்கரம்பாள்புரம், கருங்குளம், தாழையுத்து, பாளை கேடிசி நகர், பேட்டை ஆகியவற்றிலுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications