13, 26 தேதிகளிலேயே குண்டுவெடிப்பு உள்ளிட்டவற்றை நிகழ்த்தும் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் பெரும்பாலும் 13 அல்லது 26 ஆகிய தேதிகளில்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நாட்களைத் தேர்வு செய்து தாக்குதல் நடத்துவது பெரும்பாலும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் மட்டுமே.

இந்தத் தேதிகளில் மட்டுமே தாக்குதல்களை இந்த அமைப்புகள் நடத்துவதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை கைதாகியுள்ள இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போதும் இந்த தேதிகள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கும் கூட இதற்கான காரணம் தெரியவில்லை.

இந்தத் தேதிகளுக்குப் பின்னர் சென்டிமென்ட் ஏதாவது இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்றும் தெரியவில்லை.

2008ம் ஆண்டு மே 13ம் தேதி ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் ஆறு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த 21 குண்டுவெடிப்புகளில் 57 பேர் கொல்லப்பட்டனர்.

2008ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் ஊடுறுவிய 10 தீவிரவாதிகள் மூன்று நாட்கள் நடத்திய வெறியாட்டத்திற்கு 187 பேர் பலியானார்கள்.

2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி 13 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மட்டும் தாக்குதல்களை நடத்துவது பெரும்பாலும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள்தான் என்பது தெரிய வருகிறது.

பாகிஸ்தானில் முழுமையான தீவிரவாத பயிற்சி பெற்ற அமைப்புதான் இந்தியன் முஜாஹிதீன். லஷ்கர் இ தொய்பா சொல்படி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை இது மேற்கொண்டு வருகிறது.

தான் நேரடியாக ஈடுபடாமல் இந்தியன் முஜாஹிதீன் மூலம் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது லஷ்கர் அமைப்பு.

திட்டமிடல் உள்ளிட்டவற்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பு செய்து அதை இந்தியன் முஜாஹிதீனிடம் கொடுத்து நிறைவேற்றச் செய்வது வழக்கமாகி விட்டது.

மும்பையில் நேற்று நடந்த மூ்ன்று குண்டுவெடிப்புகளுமே சக்தி வாய்ந்தவைதான். அதிலும் ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இது இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வைப்பது இந்த அமைப்பு மட்டும்தான். ஏற்கனவே ஜவேரி பஜார் பகுதியை இந்த அமைப்பு பலமுறை குண்டு வைத்து நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளதும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+