மகாராஷ்டிராவில் வினோதம்-லாட்ஜில் ரூம் போட்டு ஜீன்ஸ், டீசர்ட்டுடன் பிச்சை எடுத்த 43 பெண்கள் கைது
ஔரங்காபாத்: மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.
அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதிப்படுவதாகவும் கூறி ரூ. 50 கொடுங்க, இல்லாட்டி அதற்கு மேல் கூட கொடுக்கலாம் என்று கேட்கவே ஆண்கள் ஷாக் அடித்தது போலி எகிறி நின்றனர். பார்த்தால் படாடோபமாக இருந்து கொண்டு கஷ்டப்படுவதாக பொய் கூறுகிறார்களே என்று கடுப்பாகிவிட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த லத்தூர் போலீசார் அந்த 43 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து லத்தூர் எஸ்பி பி.ஜி. கைகர் கூறுகையில்,
இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இங்கு லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். பகல் நேரங்களில் இப்படி பிச்சை எடுத்து வந்துள்ளனர். நாங்கள் ராஜஸ்தான் போலீசை தொடர்பு கொண்டு இந்த பெண்கள் எங்கிருந்து வருகிறார்கள், குடும்ப பின்னணி என்ன என்பது குறித்து கேட்கவிருக்கிறோம். அவர்கள் பெயர் போலீஸ் ரெக்கார்டில் இருக்கிறதா என்பதையும் கண்டறியவுள்ளோம்.
ஒரே மாநிலத்தில் இருந்து இத்தனை பெண்கள் இங்கு வந்து பிச்சை எடுப்பது வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் சிலர் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்துள்ளனர். இதில் சில வயதான பெண்மணிகளும் உள்ளனர் என்றார்.
அந்த பெண்கள் லத்தூருக்கு முன்பு ஔரங்காபாத்தில் பிச்சை எடுத்துள்ளனர். அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்களுக்கு ஆண் துணை இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் தெருவில் பிச்சை எடுத்து, மக்களுக்கு இடையூறு செய்தனர். அவர்களை அவர்கள் ஊருக்கே திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று இன்ஸ்பெக்டர் ககடே தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications