ராஞ்சியில் சிமி இயக்க தீவிரவாதி வீட்டில் என்ஐஏ அதிரடி சோதனை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சிமி இயக்கத்தைச் சேர்ந்த மான்ஷெர் ஆலம் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மான்சர் ஆலமுக்கு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளதால் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.
சிமி அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதாகும். மான்ஷெர் ஆலம், 2007ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர். இந்த நிலையில் அங்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக உ.பி. மற்றும் கர்நாடக மாநில போலீஸாரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்பு கொண்டு சில முக்கியத் தகவல்களைக் கோரியுள்ளதாக தெரிகிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் குறித்த தகவல்களும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல உ.பியில் சிமி இயக்கத்தவர்கள் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்த தகவல்களும் கோரப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications