கறுப்புப் பண விசாரணைக்கு அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு

கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவின் துணைத் தலைவராக எம்.பி. ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் மத்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு (ரா) அமைப்பின் உறுப்பினர்கள் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல உயர் நிலைக் குழு ஒன்றையும் (HLC) அரசு அமைக்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. இக்குழுவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அங்கமாக செயல்படலாம் என குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து உள்துறை, நிதி அமைச்சகங்கள், சட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தின. அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பின் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென கூறியிருப்பதையும் பரீசிலித்து திரும்பப் பெற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் விளக்கத்தை முழுவதுமாக உச்ச நீதிமன்றம் தெரிந்து கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, உச்ச நீதிமன்றம் ஜூலை 4-ஆம் தேதி அமைத்த பி.பி.ஜீவன் தலைமையிலான விசாரணைக் குழு மறுபரீசிலனை செய்ய வேண்டுமென்று தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு எந்த புலனாய்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications