சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
தூத்துக்குடி: சட்டசபைத் தேர்தலில் நாம் சகவாசம் சரியில்லாததால்தான் தோற்றோம். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தூத்துக்குடி, முத்தையா புரத்தில் இளங்கோவன் கோஷ்டியினரும், ஜி.கே.வாசன் கோஷ்டியினரும் இணைந்து காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
அப்போது இளங்கோவனை, அடுத்த காங்கிரஸ் தலைவர் என்று அவரது கோஷ்டியினர் புகழ்ந்து பேசினர். அதைக் கேட்டு வாசன் கோஷ்யிடினர் அமைதியாக இருந்தது வியப்பை அளிப்பதாக இருந்தது.
நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,
வெற்றி, தோல்வி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே அல்ல. எங்கள் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இந்தியா இருக்கும்வரை காங்கிரஸ் கட்சி இருக்கும்.
ஐந்து மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி தோற்றது ஏன்? சகவாசத்தால் தான் தோற்றோம்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ஊழலை காங்கிரஸ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஊழல் என்றால் நடவடிக்கை எடுக்க தயங்காது. கல்மாடி, சவான் ஆகியோர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லையா?.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அவற்றை மீட்கக் காவல் துறையில் தனிப்பிரிவு அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளளதை வரவேற்கிறோம்.
மக்களிடம் எங்கள் கட்சியின் செல்வாக்கை எடுத்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். கட்சித் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்து இது என்றார் இளங்கோவன்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications