மீண்டும் கேரளாவில் பன்றிக் காய்ச்சல்-1,190 பேர் பாதிப்பு
எர்ணாகுளம்: தொடர் மழை காரணமாக கேரளாவில் பல்வேறு வகையான நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. மீண்டும் பன்றிக் காய்ச்சலும் பரவியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்பட பல நோய்கள்பரவி வருகின்றன.
கேரளாவில் கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,190 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,133 பேர் புறநோயாளிகளாகவும், 57 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர 101 பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட 34 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவனந்தபுரத்தில் 2 பேரை இந்த நோய் தாக்கியுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நோய் பரவுவதை தடுக்க கேரள மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications