25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும்: மன்னர் ஜவகர்
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடந்து வருகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடந்து வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் இந்த கலந்தாய்வில் இது வரை 24 ஆயிரத்து 61 பேர் தங்கள் விருப்ப இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 856 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 133 பேரும், சுயநிதி கல்லூரிகளில் 16ஆயிரத்து 72 பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 182 இடங்கள் உள்ளன.
இதில் சுமார் 20 முதல் 21 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கக்கூடும். இதேபோன்று கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மொத்தம் 25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும். கடந்த ஆண்டு 8 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தது.
இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவைத் தான் விரும்பி எடுத்துள்ளனர். தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு அதிக வேலைவாயப்புகள் உள்ளதால் அந்த பிரிவையும் கணிசமான மாணவர்கள் எடுத்துள்ளனர்.
எந்த பிரிவை எடுத்தாலும் சரி மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால் வாழ்வில் நன்றாக இருக்க முடியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications