சிதம்பரம் உறவுக்காரப் பெண் கொலையில் கட்டுமானத் தொழிலாளர் கைது
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவுப் பெண் கொலை வழக்கில் கொத்தனார் மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நகை பணத்துக்காக கொலை செய்ததாக மாரிமுத்து கூறியுள்ளார். இருப்பினும் அதையும் தாண்டி வேறுகாரணம் இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் தொடர்நது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் தூரத்து சொந்தக்காரர் நாச்சாள் சொக்கலிங்கம் (26). அவர் சென்னை மந்தைவெளியில் தனது ஆடிட்டர் கணவரர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
நாச்சாள், பாங்க் ஆப் அமெரி்க்காவில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். கடந்த வெள்ளிக் கிழமை நாச்சாள் தனது வீட்டில் கைகள் கட்டப்பட்டு, முகம் பாலிதின் கவரால் கட்டப்பட்டும் இறந்து கிடந்தார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நாச்சாள் தனது மகளை பிளேஸ்கூலில் கொண்டுபோய் விட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை. இதற்கிடையே நாச்சாளின் சகோதரர் பரணி அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், முடியவில்லை. இதையடுத்து பரணி தனது தந்தைக்கு போன் செய்து மந்தவெளி்க்குச் சென்று நாச்சாளைப் பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
அப்போது தான் நாச்சாள் இறந்தது தெரிய வந்தது. அவர் கழுத்தை நெறித்தற்கான அடையாளம் இருந்தது. அவரது தங்க செயின், வளையல்களை காணவில்லை. அவர் செல்போன் சிம் கார்டும் காணவில்லை.
இந்த கொலை நகை, பணத்திற்காக நடந்த மாதிரி தெரியவில்லை. யாரோ வழக்கை திசை திருப்புவதற்காகத் தான் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் நாச்சாள் தங்கியிருந்த அபார்ட்மெண்டிற்கு அருகில் வேலை பார்த்து வந்த கொத்தனார் மாரிமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக கூறியதாக தெரிகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications