வாகன உற்பத்தி, சூரிய மின்சக்தி்யில் முதலீடு செய்க: அமெரி்க்காவுக்கு ஜெ. அழைப்பு
சென்னை: வாகன தயாரிப்பு, சூரிய மின்சக்தி போன்றவற்றில் தமிழகத்தில் அதிக முதலீடு செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியை கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று சென்னை வந்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
வாகன தயாரிப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்த தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றது. இந்த வாயப்புகளை பெருக்கிட பல்வேறு நாடுகளின் நடுத்தர நிறுவனங்களை அழைத்துப் பேசி புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தாயாரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 10 பூங்காக்கள் அமைத்து அவை ஒவ்வொன்றில் இருந்தும் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமி்ட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும். இந்த திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் பங்குகொள்ள வேண்டும்.
2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே தமிழகத்தில் மட்டும் 10 முதல் 12 மில்லியன் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று மதி்ப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை 4 மடங்கு அதிகரிக்க வேண்டும்.
தமிழக அரசுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டால் சிறந்த தொழில் பயிற்சி அளிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.1 லட்சம் கிமீ சாலையை மேம்படுத்த வேண்டும். அதற்கு 15 முதல் 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும். தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகளைத் துவங்க அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் அதற்கு சரியான உள்கட்டமைப்பு வசதி வேண்டும் என்றார்.
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து ஹிலாரி தனது கருத்தை தெரிவித்தார். மேலும், தொழிற் பயிற்சி திட்டங்களை பகிர்ந்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications