அக்டோபர் இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலக மக்கள் தொகை வரும் அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியைத் தொடும் என்று தெரிய வந்துள்ளது.
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. என்ன தான் உலக நாடுகள் மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது.
கடந்த 1960-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 300 கோடியாக இருந்தது. இது அடுத்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து 1999-ல் 600 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையி்ல் வரும் அக்டோபர் மாத இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் வீதம் ஒரு வருடத்திற்கு 7.8 கோடி அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதே வேகம் தொடரும்பட்சத்தி்ல் வரும் 2025-ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications