தூத்துக்குடி: 33 சதவீத தள்ளுபடியில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ஐ. திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்கள் நலன் கருதி உபயோகத்தில இருக்கும் மற்றும் புதிய இணைப்புகளுக்கு தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 33 சதவிகிதம் வரை தள்ளுபடி சலுகைகளைப் பெறலாம்.
மூன்று ஆண்டு திட்டம்: வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் 24 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 36 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதத்துக்கான வாடகை இலவசமாக வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டு திட்டம்: இத்திட்டத்தின் மூலம் 18 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 24 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 6 மாதத்துக்கான வாடகை சலுகையாக வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டு திட்டம்: வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் 10 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 12 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் 2 மாதத்துக்கான வாடகை சலுகையாக வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களில் மாறுவதற்கு 0461- 2333555 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வீடு தேடி வந்து சேவை வழங்கப்படுகிறது," என்றார்.












Click it and Unblock the Notifications